காலைத் தியானம் – ஆகஸ்ட் 13, 2021

சகரியா 13: 1 – 6      

கர்த்தருடைய நாமத்தைக் கொண்டு பொய் பேசுகிறபடியால்   

                            இன்று வாசித்த இந்த ஆறு வசனங்கள் நாம் வாழும் இந்த கடைசி நாட்களில் நடப்பவைகளையும் நடக்கப் போகிறவைகளையும் படம் பிடித்துக் காண்பிக்கின்றன. ஒரு பக்கம் மனிதரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவர்களைச் சுத்தமாக்கும் கிருபையின் ஊற்று ஓடிக்கொண்டேயிருக்கிறது. நமது நாட்டிலேயே பல இடங்களிலும் மாநிலங்களிலும் நடந்துகொண்டிருக்கும் இந்த அதிசயத்துக்கு நாம் அனைவரும் சாட்சிகள். இன்னொரு பக்கம் விக்கிரக ஆராதனையும் கள்ளத் தீர்க்கதரிசனங்களும் குறைவில்லாமல் நடந்துகொண்டேயிருக்கின்றன. இவைகள் அழிக்கப்படும் நாள் வெகு தொலைவின் இல்லை. பலவிதமான வேதாந்தங்களைப் பேசுகிறவர்களிடமும் தீர்க்கதரிசனம் என்ற பெயரில் வேதத்திற்கு முரண்பாடானதைப் பேசுகிறவர்களிடமும் ஜாக்கிரதையாயிரு.                   

ஜெபம்:

ஆண்டவரே, கள்ளத் தீர்க்கதரிசிகள் என்னை வஞ்சித்துவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.