காலைத் தியானம் – ஆகஸ்ட் 14, 2021

சகரியா 13: 7 – 9      

வெள்ளியை உருக்குகிறது போல அவர்களை உருக்கி          

                            உலகெங்கும் நம்மைச் சுற்றியிருக்கும் கொள்ளைநோயும், இயற்கையின் சீற்றங்களும் நாம் கடைசி நாட்களின் விளிம்பில் வாழ்கிறோம் என்பதை உறுதிப் படுத்துகின்றன. இந்நாட்களில் நாம் ஆண்டவரோடு அதிக நேரம் செலவழித்து நம்மைப் பரிசுத்தப்படுத்திக் கொள்வது அவசியம்.  இந்நாட்களில் நாம் நம்மைச் சுற்றி நடக்கும் ஆவிக்குரிய போராட்டங்களைக் குறித்து ஒன்றும் தெரியாமல் இருக்கக்கூடாது. நாம் சிதறடிக்கப்பட்டாலும், எந்தவித துன்பங்களைச் சந்தித்தாலும்  அல்லது எந்தவித சூழ்ச்சிகள் மூலமாக சாத்தானால் இழுக்கப்பட்டாலும், திரியேக தேவனைவிட்டு விலகிவிடக்கூடாது. அப்போது கர்த்தர் நம்மை வெள்ளியை உருக்குகிறது போல உருக்குவார். தங்கத்தைப் புடமிடுவது போல நம்மைப் புடமிடுவார். நம்மைப் பரிசுத்தப்படுத்துவார். கர்த்தர் நம்மைப் பார்த்து இவன்(ள்) என்னுடையவன்(ள்) (வசனம் 9) என்று சொல்லப்போகும் வார்த்தைகளை நினைத்துப் பார்த்தால் இன்று நாம் கடந்து செல்லும் துன்பங்களும் சோதனைகளும் ஒன்றுமேயில்லை.                   

ஜெபம்:

ஆண்டவரே, இந்த கடைசி நாட்களில் உம்மோடு அதிக நேரம் செலவிட எனக்குக் கிருபை தாரும். ஆமென்.