காலைத் தியானம் – ஆகஸ்ட் 16, 2021

சகரியா 14: 10 – 21      

எல்லாப் பானைகளும் சேனைகளின் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்          

                            கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது அவர் எளிமையான மனிதனாக வரப்போவதில்லை. சகல வல்லமையும் கெம்பீரமும் வெளிப்படும்படி பரிசுத்த தூதர்களின் கூட்டத்தோடு, சேனைகளின் கர்த்தராக, ராஜாதி ராஜனாக அவர் வருவார். அவ்வருகை இரண்டுவித தாக்கங்களை மனிதரிடம் ஏற்படுத்தும். அசுத்தமான யாவும் அழிக்கப்படும். கர்த்தரை எதிர்த்து நிற்கிறவர்கள் பெரிய துன்பத்துக்கு ஆளாவார்கள். கர்த்தருடைய பிள்ளைகளோ அவரோடே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அவர்கள் நடுவே சமாதானமும் மகிழ்ச்சியும் நிலைக்கும். குதிரையின் மணிகள், பானைகள் போன்ற சாதாரண பொருட்கள் கூட பரிசுத்தமாயிருக்கும். பரிசுத்தத்தைத் தவிர வேறே எதையும் பார்க்க முடியாது. கர்த்தருடைய ஆலயத்தை வியாபாரமாக்கும் ஒருவரும் அங்கே இருக்கமாட்டார்கள்.                

ஜெபம்:

ஆண்டவரே, உம்முடைய இரண்டாம் வருகையின் நாளுக்காக என்னை ஆயத்தப்படுத்தும். ஆமென்.