மல்கியா 1: 10 – 14
உங்கள் கைகளிலுள்ள காணிக்கை எனக்கு உகந்ததல்ல
ஆதாம் ஏவாளின் மகன்களான காயீன், ஆபேல் காலத்திலிருந்தே கர்த்தர் தமக்குப் பிரியமான காணிக்கை என்ன என்பதை மனிதனுக்குச் சொல்லிக்கொண்டேயிருக்கிறார். ஏனோதானோ என்று காணிக்கை கொடுக்க வேண்டாம். மற்ற மனிதரின் பார்வைக்காகவும் நாம் காணிக்கை கொடுக்கக்கூடாது. நம்மிடம் உள்ளவை எல்லாமே கர்த்தர் கொடுத்தவைதான் என்ற உணர்வும், அதில் ஒரு சிறிய பகுதியைத்தான் நாம் நமது நன்றியைத் தெரிவிக்கும்படி கர்த்தருக்குக் கொடுக்கிறோம் என்ற உணர்வும் நம் உள்ளத்தில் இருக்கவேண்டும். காணிக்கையே கொடுக்கக் கூடாது என்று கர்த்தர் சொல்லவில்லை. எப்படிப்பட்ட உள்ளத்தோடு காணிக்கை கொடுக்கிறாய் என்பதுதான் முக்கியம் என்று சொல்லுகிறார். தவறான உள்ளத்தோடு, தவறான நோக்கத்தோடு செலுத்தப்படும் காணிக்கை கர்த்தருக்கு உகந்ததல்ல. கர்த்தர் உன் உள்ளத்தைப் பார்க்கிறார்.
ஜெபம்:
ஆண்டவரே, என் மீது இரங்கி என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும். ஆமென்.