காலைத் தியானம் – ஆகஸ்ட் 19, 2021

மல்கியா 2: 1 – 9      

அநேகரை அக்கிரமத்தினின்று திருப்பினான்             

                            லேவியோடு கர்த்தர் ஒரு உடன்படிக்கையைப் பண்ணியிருந்தார். மக்கள் கர்த்தரை உண்மையான உள்ளத்தோடு தொழுதுகொள்ளவும், கர்த்தரை விட்டு விலகிவிடாமல் அவரோடு நெருங்கி வாழவும் உதவிசெய்யும்படி, கர்த்தருடைய ஊழியனாக லேவி நியமிக்கப்பட்டான். லேவியின் வம்சத்தில் வந்த எல்லா ஆசாரியர்களிடமும், இன்று ஊழியத்தில் ஈடுப்பட்டிருக்கும் எல்லாரிடமும் அதே சேவைதான் எதிர்பார்க்கப்படுகிறது. மக்களை அக்கிரமத்திலிருந்து திருப்புகிறவர்கள் எத்தனைபேர்? மக்களை இடறப் பண்ணுகிறவர்கள் எத்தனை பேர்? ஆலயத்திலும் யார் பணக்காரர் அல்லது முக்கிய பதவிகளிலிருப்பவர்கள் என்பதை வைத்து பட்சபாதம் வந்துவிட்டதோ? கர்த்தருடைய கோபத்துக்கு ஆளாகாமல் உன்னைக் காத்துக் கொள்.       

ஜெபம்:

ஆண்டவரே, நான் யாரையும் இடறப் பண்ணாமல் இருக்கும்படி எனக்கு சுத்த மனதைத் தாரும். ஆமென்.