காலைத் தியானம் – ஆகஸ்ட் 20, 2021

மல்கியா 2: 10 – 12     

அந்நிய தேவதையின் குமாரத்திகளை விவாகம்பண்ணினார்கள்             

                            மற்ற தெய்வங்களை ஆராதிக்கும் பெண்ணைத் திருமணம் செய்யவேண்டாம் என்பது கர்த்தர் இஸ்ரவேலருக்குச் சொன்ன ஒரு முக்கியமான கட்டளை. சாலொமோன் ராஜா உட்பட பல இஸ்ரவேலர் தங்களுடைய கண்களுக்கும் இருதயத்துக்கும் பிடித்த பெண்களை விவாகம் செய்து, கர்த்தருடைய இந்த கட்டளையை அசட்டைப்பண்ணினார்கள். இது இன்றும் கிறிஸ்துவை நேசிக்கும் பல குடும்பங்களில் தொடருகிறது. இதைத் தவிர்க்க இரண்டு ஆலோசனைகள். முதலாவது உன் பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும்போதே அவர்களுடைய வாழ்க்கைத் துணைக்காக ஜெபம் செய்யவேண்டும். இரண்டாவதாக உன் பிள்ளைகளுக்கு விவரம் தெரியவரும் பருவத்திலிருந்தே (12 அல்லது 13 வயதிலிருந்தே) அவர்களோடு அவர்களுடைய வாழ்க்கைத் துணைவி/ துணைவனைப் பற்றி பேச வேண்டும். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கு எது சரியான வயது என்பதைச் சொல்லிக்கொடுக்க வேண்டும். பெண் அல்லது மாப்பிள்ளை பார்க்கும் விஷயத்தில் வேதத்தின் அடிப்படையில் எவை முக்கியமானவை என்பதை முதலில் நீ முடிவு செய்துகொண்டு அவற்றையே உன் பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

ஜெபம்:

ஆண்டவரே, என் பிள்ளைகளுக்கு உம்மை நேசிக்கும் வாழ்க்கைத் துணையைத் தெரிந்துகொள்ளும் ஞானத்தை தாரும். ஆமென்.