காலைத் தியானம் – ஆகஸ்ட் 21, 2021

மல்கியா 2: 13 – 17     

தள்ளிவிடுதலை நான் வெறுக்கிறேன்                    

                            விவாகரத்து இன்று மிகவும் சாதாரணமாகிக் கொண்டே போகிறது. சமீப நாட்கள் வரை நம் நாட்டில் பரிசுத்த வேதாகமத்தை அறியாதவர்கள் கூட, கலாச்சார அடிப்படையில் விவாகரத்தை நினைத்துப் பார்க்கவில்லை. இன்றோ நம் நாட்டில் கிறிஸ்தவர்கள் உட்பட எல்லாரிடமும் விவாகரத்து செய்வதே ஒரு கலாச்சாரமாகிவிட்டது. இதற்கு முக்கியக் காரணம் கணவன் மனைவி உறவில், ஒருவரிடம் அல்லது இருவரிடமும் உண்மையில்லாமல் இருப்பதுதான். கர்த்தர் முன்னிலையில் செய்யப்படும் உடன்படிக்கையைக் கர்த்தர் மறப்பதில்லை. நீயும் மறந்துவிடாதே. தேவ பக்தியுள்ள சந்ததியைப் பெறும்படி கர்த்தர் கணவனையும் மனைவியையும் ஒரே மாம்சமாக்குகிறார் (15ம் வசனம் – முடிந்தால் ஆங்கில மொழிபெயர்ப்பையும் வாசியுங்கள்). தேவ பக்தியுள்ள சந்ததியைக் கொடுத்து கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

ஜெபம்:

ஆண்டவரே, உம் முன்னிலையில் நான் செய்த உடன்படிக்கையை அலட்சியம் செய்யாத திடமனதை எனக்குத் தாரும். ஆமென்.