காலைத் தியானம் – ஆகஸ்ட் 22, 2021

மல்கியா 3: 1 – 7     

நான் கர்த்தர், நான் மாறாதவர்                        

                            கர்த்தரை நாம் இன்னொரு மனிதனைப் பார்க்கிறதைப் போலவே பார்க்கிறோம். காலத்துக்கேற்றபடி நாம் மாறிக் கொள்ளுகிறோம். நம்முடைய பெற்றோரின் காலத்தில் இருந்த ஒழுக்கங்களில் பல இந்த காலத்துக்குப் பொருந்தாது என்று சொல்லிவிடுகிறோம். உதாரணமாக மாலை இருட்டுவதற்கு முன்னதாக எல்லாரும் வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்பது அன்றைய ஒழுக்கம். இன்றோ நம் சூழ்நிலைக்கு அது பொருந்தாது என்று விட்டுவிடுகிறோம். காலப்போக்கில் நாம் செய்த உடன்படிக்கைகளைக் கூட நாம் கைக்கொள்வதில்லை. பணம் நம் மனநிலையை மாற்றிவிடுகிறது. புதிய உறவுகள் நம்முடைய வாழ்க்கையையே மாற்றிவிடுகின்றன. கர்த்தரோ என்றும் மாறாதவராயிருக்கிறார். நாம் அழிந்து போகாமல் மீட்கப்பட்டு அவரோடு ஒப்புறவாக வேண்டும் என்பதிலும் அவர் மாறாதவராக இருப்பதால், என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று இன்றும் சொல்லுகிறார். ஒருவேளை இன்னும் நீ உன் இஷ்டப்படி பாவ சிந்தையில் வாழ்ந்துகொண்டிருந்தால், இன்றே அவரிடம் திரும்பு.

ஜெபம்:

ஆண்டவரே, எனக்காகப் பொறுமையுடன் காத்திருந்ததற்காக நன்றி சுவாமி. ஆமென்.