காலைத் தியானம் – ஆகஸ்ட் 25, 2021

சங் 1: 1 – 6         

துன்மார்க்கரின் வழியோ அழியும்                                  

                            நீதிமானாயிருப்பதை நீ தெரிந்துகொள்ள வேண்டும். அது தானாக வந்துவிடுவதில்லை. அது நீ விரும்பி, தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. It is a choice you make. நீதிமானாயிருப்பதை நீ தெரிந்துகொள்ளாவிட்டால் துன்மார்க்கனாய் வாழ்கிறாய் என்று அர்த்தம். ஆண்டவருடைய தீர்ப்பில் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும் இடைப்பட்ட ஒரு நிலை கிடையாது. கறுப்பு அல்லது வெள்ளை தான் உண்டு. இரண்டும் கலந்த சாம்பல் நிறம் கிடையாது. துன்மார்க்கர் செழிப்புடன் வாழ்வது போல தோன்றும். அநியாயம் செய்கிறவர்கள் மகிழ்ச்சியாயிருப்பது போல தோன்றும். எல்லாம் ஒரு குறுகிய காலத்திற்கு தான். நியாயத்தீர்ப்பு நாளில் துன்மார்க்கன் நிலைநிற்பதில்லை. நீதிமானாய் வாழ்வதைத் தெரிந்துகொள்.

ஜெபம்:

ஆண்டவரே, நீதிமானாகவே எப்பொழுதும் வாழவேண்டும் என்ற வாஞ்சை என்னில் நிலைத்திருப்பதாக. ஆமென்.