காலைத் தியானம் – ஆகஸ்ட் 27, 2021

சங் 3: 1 – 8               

அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று . . .  சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள்                                  

                            இன்றைய சூழ்நிலையிலும் தூய்மையான வாழ்க்கை வாழ்கிறவர்களை வெறுக்கிறவர்கள் அநேகர். இவனை எப்படி விழத்தட்டலாம் என்று பார்க்கிறவர்களின் கூட்டம் ஒன்று உண்டு. நீ இப்படி தூய்மையான வாழ்க்கை வாழ்வதால் என்ன பிரயோஜனம்? லஞ்சம் வாங்குகிறவர்கள் நன்றாகத்தானே இருக்கிறார்கள் என்று சொல்லி நம்மையும் துன்மார்க்கத்தின் பக்கம் இழுக்க முயலும் மக்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள். இன்னொரு பக்கத்தில், நீ இப்படி ஒரு தூய்மையான வாழ்க்கையைப் பின்பற்ற முயற்சி செய்தாலும், கர்த்தர் உன் மீது கோபமாயிருக்கிறார்; உனக்கு இரட்சிப்பு இல்லை; ஆகையால்தான் இப்படி நீ துன்பங்களை அனுபவிக்கிறாய் என்று சொல்லும் மக்கள் கூட்டமும் உண்டு. மனிதர்கள் சொல்லுவதைக் கேட்டு சோர்வடைந்துவிடாதே. உன் ஆண்டவரையும் அவருடைய வார்த்தையையும் மாத்திரம் பிடித்துக் கொள். இரட்சிப்பு கர்த்தருடையது.

ஜெபம்:

ஆண்டவரே, நீரே என்னை இரட்சிக்கிறவரும் என்னை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர். என் மீது இரக்கமாயிரும். ஆமென்.