காலைத் தியானம் – ஆகஸ்ட் 29, 2021

சங் 5: 1 – 12             

காலையிலே . . . ஆயத்தமாகிக் காத்திருப்பேன்                      

                            பூமிகாலை நேரம் அமைதியான நேரம். நம் உடலும் உள்ளமும் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியோடு இருக்கும் நேரம். நம்மில் அநேகருக்கு ஒரு நாளின் 24 மணி நேரத்தில் மிகச் சிறந்த நேரம் காலை நேரம். உன் நேரத்தில் மிகச் சிறந்த பகுதியை ஆண்டவருடன் உறவாட ஒதுக்கி வைக்கவேண்டும் என்பதுதான் காலைத் தியானத்தின் நோக்கம். ஒரு வேளை நீ இரவு முழுவதும் வேலை செய்யும் ஒரு night shift வேலையிலிருந்தால் வேறு ஒரு சமயத்தை ஆண்டவருக்காக ஒதுக்கி வைப்பதில் எந்தத் தவறும் இல்லை. உன் நாளின் சிறந்த பகுதியை ஆண்டவருக்காக ஆயத்தப்படவும், காத்திருக்கவும், அவரோடு பேசவும் ஒதுக்கி வைக்க மறந்துவிடாதே.

ஜெபம்:

ஆண்டவரே, என் நேரத்தின் சிறந்த பகுதியை உமக்கென்று பிரித்தெடுத்து வைக்கிறேன். என்னோடு பேசும். ஆமென்.