காலைத் தியானம் – ஆகஸ்ட் 30, 2021

சங் 6: 1 – 10             

உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்து கொள்ளாதேயும்… தண்டியாதேயும்                      

                            எந்தெந்த காரியங்களுக்கெல்லம் உன் பிள்ளைகள் மீதும், உன் கணவன் அல்லது மனைவி மீதும் உனக்குக் கோபம் வருகிறது என்பதை யோசித்துப் பார். உனக்குக் கோபம் வரும்போது நீ என்ன செய்கிறாய் என்பதையும் யோசித்துப்பார். அதே போல ஆண்டவர் உன் மீது கோபப்பட்டால் என்ன ஆகும் என்று எப்போதாவது நினைத்துப் பார்த்ததுண்டா? ஆண்டவர் நம்மிடம் காட்டும் அன்பும் பொறுமையும் உன் மனித உறவுகளில் காணப்படுகின்றனவா? நீ எந்த அளவினால் அளக்கப்பட விரும்புகிறாயோ அதே அளவினால் மற்றவர்களை அளக்க மறந்து விடாதே.

ஜெபம்:

ஆண்டவரே, உம்முடைய குணாதிசயங்களை மற்றவர்கள் என்னிடம் காண கிருபை தாரும். ஆமென்.