காலைத் தியானம் – ஆகஸ்ட் 31, 2021

சங் 7: 1 – 7             

என்னோடே சமாதானமாயிருந்தவனுக்கு நான் தீமை செய்ததுண்டானால்                      

                            நான் இப்படி கஷ்டப்படுகிறேனே, அவன் எனக்கு விரோதமாக இப்படி செய்துவிட்டானே என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம் அல்லவா? ஆனால், அவனுக்கு விரோதமாக நான் இப்படி செய்துவிட்டேனே என்று யாராவது சொல்வதைக் கேட்டிருக்கிறோமா? நம்முடைய சுயநலம் எப்பொழுதும் நம்முடைய மகிழ்ச்சி, நம்முடைய தேவை, நமக்கு செய்யப்பட வேண்டிய நியாயம் என்று மாத்திரம் நினைக்க வைக்கிறது. உன்னைப் போல் பிறனையும் நேசி என்ற கட்டளையை நீ கைக்கொண்டால் உன் வாழ்க்கை வித்தியாசமாக இருக்கவேண்டும். நீ யாருக்கு விரோதமாகவாது தீமை செய்திருந்தால், உடனேயே அந்த நபரிடமும் ஆண்டவரிடமும் மன்னிப்புக் கேள். உன்னைச் சூழ்ந்துள்ள கஷ்டங்கள் மறைந்துவிடும். உன் கஷ்டங்களுக்கு நீயே காரணமாயிருக்கலாம்.

ஜெபம்:

ஆண்டவரே, நான் உமக்கு விரோதமாகவும் பிறருக்கு விரோதமாகவும் செய்த தவறுகளை மன்னியும். ஆமென்.