காலைத் தியானம் – செப்டம்பர் 04, 2021

சங் 9: 11 – 20             

அவர் செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்

                            இன்று facebook போன்ற சமூக ஊடகங்களிலே மக்கள் எதையெல்லாமோ அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.  நான் நேற்று எப்படிப்பட்ட உணவை சாப்பிட்டேன் தெரியுமா? இதோ இந்த படத்தில் பர்த்துக் கொள்ளுங்கள்! நான் அமெரிக்கா சென்ற போது எடுத்த இந்த படத்தைப் பாருங்கள்’ எவ்வளவு அழகாயிருக்கிறது என்று சொல்லி like button ஐ press பண்ணுங்கள். எங்களுக்குத் திருமணமாகி இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன! நானும் என் மனைவியும் (அல்லது கணவனும்) எவ்வளவு அந்நியோனியமாய் இருக்கிறோம் பாருங்கள்.  என் பிள்ளைகள் எதையெல்லாம் சாதிக்கிறார்கள் பாருங்கள்! இப்படிப்பட்ட அறிவுப்புகள் தானே கிறிஸ்தவர்களிடம் இருந்தும் போய்க்கொண்டே இருக்கிறது! கர்த்தர் யார் என்பதையும் நீ எப்படி அவரை நம்பி வாழ்கிறாய் என்பதையும் உன் நண்பர்களிடம் பேசும்போது தெரிவிக்கிறாயா?  கடினமான சூழ்நிலகளில் கூட கவலைப் படாமல் அமைதியாய், கர்த்தர் பார்த்துக் கொள்வார் என்று உன்னால் இருக்கமுடிகிறதா? உன் வார்த்தைகளும் உன் நடத்தையும் கர்த்தருடைய செய்கைகளை மற்றவர்களிடம் அறிவிக்கின்றனவா?

ஜெபம்:

ஆண்டவரே, நீர் செய்துள்ள பல நன்மைகளைக் குறித்து பிறரிடம் பேசும் வாஞ்சையையும் தைரியத்தையும் எனக்குத் தாரும். ஆமென்.