சங் 10: 1 – 9
தன் உள்ளம் இச்சித்ததைப் பெற்றதினால் கர்த்தரை அசட்டை பண்ணுகிறான்
கடந்த வருடம் ஸ்கூட்டரில் சென்ற கிறிஸ்தவன் இந்த வருடம் காரில் போகவில்லையென்றால் அவனுடைய விசுவாசம் குறைவுபட்டது என்று போதிக்கும் பிரசங்கிமார் அநேகர் இன்று இருக்கிறார்கள். கிறிஸ்தவனாக இருந்தால் செல்வம் மிகுந்தவனாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் கூட்டம் ஒரு பக்கம். துன்மார்க்கரிடம் செல்வம் இருக்கக் கூடாது என்று நினைக்கும் கூட்டம் இன்னொரு பக்கம். இந்த இரண்டு நிலைகளுமே தவறானவைகள். துன்மார்க்கமான வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ்கிறவன் ஆண்டவரால் தண்டிக்கப்படுவான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் செல்வம் நிரந்தரமற்றது என்பதை மறந்துவிடக்கூடாது. ஒருவனிடம் அதிக செல்வமிருந்தால் அவன் வாழ்க்கை ஆண்டவருக்குப் பிடித்தவிதத்தில் இருக்கிறது என்று அர்த்தமில்லை. அதே சமயம் அதிக செல்வம் உடையவனும், நினைத்ததை சாதித்துவிட்டேன் என்ற எண்ணமுள்ளவனும் கர்த்தரை அசட்டை செய்து அவரைப் புறக்கணிக்கும் அபாயம் இருக்கின்றது (நீதி 30: 8, 9).
ஜெபம்:
ஆண்டவரே, உம்மைத் தூஷிக்காதபடி தரித்திரத்தை எனக்குக் கொடுக்காதிரும். உம்மை அசட்டை செய்துவிடாதபடி ஐசுவரியத்தையும் எனக்குக் கொடுத்துவிடாதேயும். ஆமென்.