காலைத் தியானம் – செப்டம்பர் 06, 2021

சங் 10: 10 – 18             

தேவன் அதை மறந்தார் . .  ஒருக்காலும் அதைக் காணமாட்டார்

                            திக்கற்ற பிள்ளைகள், விதவைகள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோரைக் கர்த்தர் ஒருபோதும் மறக்கமாட்டார். திக்கற்றவர்களை நான் என்னவேண்டுமானாலும் செய்வேன், ஏனென்றால் கர்த்தர் அவர்களைக் கைவிட்டு விட்டார்; அவர்களை அவர் கண்டுகொள்ள மாட்டார் என்று நினைக்கிறவன் அறிவீனன். திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே என்று கர்த்தரிடம் சங்கீதக்காரன் சொல்லுகிறான் (வசனம் 14). இன்றும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் கொடூரங்களையும், திக்கற்றோரின் கதறுதல்களையும் கவனிக்க ஒருவருமில்லை என்று நம்மில் சிலர் நினைக்கலாம். கர்த்தர் எல்லாவற்றையும் கவனிக்கிறார். அவர் பார்வைக்கு மறைவானது ஒன்றுமில்லை. அவருடைய இருதயம் ஒடுக்கப்படுகிறவர்களுக்காக இரங்குகிறது. தேவனுடைய சாயலில் உருவாக்கப்பட்ட, இயேசு கிறிஸ்துவின் அன்பையும் இருதயத்தையும் பிரதிபலிக்கவேண்டிய நாம் ஒடுக்கப்பட்டவர்களைக் காண்கிறோமா? அவர்களுடைய சத்தம் உனக்குக் கேட்கிறதா?

ஜெபம்:

ஆண்டவரே, திக்கற்றவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உதவி செய்ய எனக்குக் கிருபை செய்யும்.  ஆமென்.