காலைத் தியானம் – செப்டம்பர் 07, 2021

சங் 11: 1 – 7             

அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது

                            நம்மைச் சுற்றி நடக்கும் அக்கிரமங்களையும் அநியாயங்களையும் பார்க்கும்போது, தீமைச் செய்கிறவர்கள் இந்த உலகில் நன்மைகளையெல்லாம் அனுபவிக்கிறார்களே, இதில் என்ன நியாயம் இருக்கிறது என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? அது மாத்திரமல்ல, ஆண்டவருடைய பிள்ளைகள் பூமியில் துன்பங்களை அனுபவிக்கும்போது ஆண்டவரே நீர் ஏன் இந்த கொடுமைகளைப் பார்க்கவில்லை என்றும் கேட்கத் தோன்றுகிறதல்லவா? கடந்த ஒரு வருடத்தில் கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு எத்தனை கர்த்தருடைய பிள்ளைகள் மரித்துவிட்டர்கள்!  ஆண்டவர் இதையெல்லாம் பார்க்கிறதில்லையா? கர்த்தருடைய கண்கள் எப்பொழுதும் மனுபுத்திரரைப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றன என்று தாவீது ராஜா சொல்லுகிறார். கர்த்தருக்கு நீ அனுபவிக்கும் துன்பங்கள் அனைத்தும் தெரியும். மேலும் உன்னுடைய எல்லா சிந்தனைகளும் செயல்களும் கூட அவருக்குத் தெரியும். நமக்கு தான் அவருடைய எண்ணங்கள் முழுமையாகத் தெரியாது.

ஜெபம்:

ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் பார்க்கிறவர், அறிந்திருக்கிறவர்  என்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆமென்.