சங் 13: 1 – 6
எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்?
இந்த சங்கீதமும் தாவீது ராஜா எழுதியதுதான். அவர் தன் அனுபவத்திலிருந்து, தன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து, வேதனையின் மத்தியில் இந்த கேள்வியைக் கேட்கிறார். இன்று நம் மனதில் தோன்றும் அநேகக் கேள்விகளை, வேதாகமத்திலுள்ள புத்தகங்களை எழுதியவர்களும் கேட்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, வேதாகமத்தில் நம்முடைய கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை தோன்றுகிறது. இன்று ஒருவேளை, எதுவரைக்கும் என் மேலதிகாரிகள் என் வேலை உயர்வைத் தடுத்து நிறுத்துவதை நீர் அனுமதிப்பீர் என்று ஆண்டவரிடம் நீ கேட்கலாம். எதுவரைக்கும் கிறிஸ்தவர்களை வெறுக்கிற, இயேசு கிறிஸ்துவை அறியாத கூட்டம் கிறிஸ்தவர்களையும் ஆலயங்களையும் அடித்து நொறுக்குவார்கள் என்று கேட்கலாம். இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதிலைத் தாவீது ராஜாவே கொடுத்துவிட்டார். நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிக்கிறேன் என்பதே அந்த பதில். ஆண்டவருடைய கிருபை உன்னையும் வழிநடத்தும்.
ஜெபம்:
ஆண்டவரே, என் வாழ்க்கை உம்முடைய கையில் இருக்கிறது என்ற நிச்சயத்தோடு மகிழ்ந்திருக்க எனக்கு உதவிசெய்யும். ஆமென்.