சங் 15: 1 – 5
தன் பணத்தை வட்டிக்குக் கொடாமலும்
வங்கிகள் வியாபாரம் அல்லது business செய்கிறவர்களுக்குக் கடன் கொடுத்து அந்தக் கடனுக்கு வட்டி வாங்குவது வேதாகமத்தில் இருக்கும் போதனைகளுக்கும் கட்டளைகளுக்கும் விரோதமானதல்ல. அதே சமயம் அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன் சொத்தைப் பெருகப்பண்ணுகிறவனை வேதாகமம் இகழ்கிறது (நீதி 28:8). சிறுமைப்பட்டிருக்கிறவர்களிடத்தில் வட்டி வாங்க வேண்டாம் என்று யாத்திராகமம் 22:25ல் பார்க்கிறோம். உன் சகோதரன் தரித்திரப்பட்டு போனால் அவனிடத்தில் வட்டி வாங்காதே என்ற கட்டளையையும் லேவியராகமம் 25: 35-37 வசனங்களில் பார்க்கிறோம். ஏழைகளையும் சிறுமைப்பட்டவர்களையும் ஒடுக்கி வட்டி வாங்குவது கர்த்தருக்கு விரோதமான செயல். Oppressing the poor or exploting the poor is a sin against God. மக்களின் நோய்களைக் குணமாக்க உழைக்கும் மருத்துவர் நியாயமான fees வாங்குவது சரியே. ஆனால் மனிதரைப் பிழிந்து பணத்தைச் சம்பாதிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு தேவையில்லாத பரிசோதனைகளையெல்லாம் செய்யச் சொல்லி அநியாயமாக சம்பாதிப்பது குற்றம். வியாதியினால் அவதிப்படும் ஏழையைப் பார்த்து இவ்வளவு பணம் கொடுத்தால்தான் உனக்கு வைத்தியம் பார்ப்பேன் என்று சொல்வது குற்றம்.
ஜெபம்:
ஆண்டவரே, ஏழைகளுக்கு இரங்கும் மனதை எனக்குத் தாரும். நான் செய்யும் வேலையிலே (தொழிலிலே) யாரையும் ஒடுக்காதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.