காலைத் தியானம் – செப்டம்பர் 12, 2021

சங் 16: 1 – 11             

கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்

                            நாம் ஒவ்வொருவரும் கர்த்தரை எப்பொழுதும் நமக்கு முன்பாக வைக்கும்படி அழைக்கப்பட்டவர்கள். கர்த்தர் நமக்கு முன்பாகவும் அருகிலும் இருக்கும்போது எந்த ஒரு நிகழ்ச்சியும் அல்லது சூழ்நிலையும் நம்மை விழத்தட்ட முடியாது. நாம் எதைக் குறித்தும் பயப்பட வேண்டியதில்லை. மரணத்தைக் குறித்து பயப்பட வேண்டியதில்லை. பண இழப்பைக் குறித்து கவலைப் படவேண்டியதில்லை. தாவீது ராஜாவோடு சேர்ந்து, நீர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை என்று சொல்ல முடியும். மேலும் கர்த்தரை எப்பொழுதும் நமக்கு முன்பாக வைத்திருந்தால் பாவம் (Sin) நம்மை நெருங்காது. பிறரைப் புண்படுத்தும்படி நடந்துகொள்ள மாட்டோம். பொறுமையைக் கடைப்பிடிப்போம். மற்றவர்களைக் கண்டு பொறாமைக் கொள்ள மாட்டோம். பிறருக்குத் தீங்கு செய்ய மாட்டோம். திட்டங்களையெல்லாம் நம் சுயவிருப்பத்தின்படி தீட்டி முடிவு எடுத்தபின், ஆண்டவரே இதை ஆசீர்வதியும் என்று சொல்ல மாட்டோம். மாறாக ஆண்டவர் காட்டும் பாதையில் நடப்போம்.

ஜெபம்:

ஆண்டவரே, நீர் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருந்து என்னை வழிநடத்தும். ஆமென்.