காலைத் தியானம் – செப்டம்பர் 14, 2021

சங் 17: 18 – 15             

கண்மணியைப் போல என்னைக் காத்தருளும்  

                            நம் கண்களுக்கு உள்ளே இருக்கும் pupil என்னும் பகுதியைத்தான் கண்மணி என்று அழைக்கிறோம்.  அது நம் உடலிலுள்ள மிகவும் மென்மையான மற்றும் முக்கியமான பகுதிகளில் ஒன்று. கண்மணிக்கு ஒரு ஆபத்தென்றால், உடல் உறுப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டு அதைப் பாதுகாக்கும். சிறு தொந்தரவுகளிலிருந்து கண்ணின் இமைகளே கண்மணியைக் காப்பாற்றிவிடும். பெரிய ஆபத்தென்றால், தலை விலகி அதைப் பாதுகாக்கும். கைகள் அதை மூடி ஆபத்திலிருந்து பாதுகாக்கும். கால்கள் ஆபத்து வரும் திசையிலிருந்து விலகி ஓடி அதைப் பாதுகாக்கும். நாம் ஒவ்வொருவரும் கர்த்தருக்குக் கண்மணி போன்றவர்கள். அவர் நம்மைப் பாதுகாக்கிறவர். நமக்குத் துன்பங்கள் வராமல் அவர் நம்மைக் காப்பதில்லை. துன்பங்களின் நடுவே கடந்து செல்லும்போதும் நாம் அழிந்துவிடாதபடி நம்மைக் காத்துக் கொள்கிறார். சாத்தான் நம்மை மேற்கொள்ளாதபடி நம்மைக் காத்துக் கொள்கிறார். சரீர பாதுகாப்புக்காக அனுதினமும் ஜெபிக்கும் நீ, உன் ஆத்தும பாதுகாப்புக்காக ஜெபிக்கிறாயா?

ஜெபம்:

ஆண்டவரே, சாத்தானுடைய சூழ்ச்சிகளில் நான் சிக்கிக் கொள்ளாதபடி, என் ஆத்துமாவைப் பாதுகாத்துக்கொள்ளும். ஆமென்.