காலைத் தியானம் – செப்டம்பர் 15, 2021

சங் 18: 1 – 10             

துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்   

                            நதுதிக்குப் பாத்திரர் கர்த்தர் ஒருவரே. வெளிப்படுத்தின விசேஷம் 5:12ல், அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ள பாத்திரராயிருக்கிறார் என்று இயேசு கிறிஸ்துவைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. இயேசு கிறிஸ்துவுக்குக் கொடுக்கவேண்டிய துதியை, மகிமையை வேறே யாருக்கும் கொடுக்கக் கூடாது. அப்படியானால் எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் நமக்கு பெரிய உதவிகளைச் செய்துள்ள ஒருவரைப் புகழ்வது தவறா?  அப்படிப்பட்டவர்களுக்கு நிச்சயமாக நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அவர்களைத் தெய்வமாக்கி விடக் கூடாது. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம் என்று கர்த்தர் சொன்னது பத்துக் கட்டளைகளில் முதலாவது கட்டளை.

ஜெபம்:

ஆண்டவரே, உம்மை மாத்திரம் துதித்துகொண்டிருக்கும் பாக்கியத்தை எனக்குத் தாரும். ஆமென்.