காலைத் தியானம் – செப்டம்பர் 16, 2021

சங் 18: 11 – 20             

என்னிலும் அதிக பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் . . .   

                            தாவீது தன் எதிரிகளைக் குறைத்து மதிப்பிடவில்லை. யுத்தங்களில் ஈடுபடும் போர்வீரர்கள், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள், பொருளாதார உலகில் போட்டி போட்டுக் கொள்ளும் கம்பெனி நிர்வாகிகள் ஆகியோர் கையாளும் யுக்திகளில் பொதுவாகவும் முக்கியமாகவும் உள்ள ஒன்று, உன்னுடைய எதிராளியின் பெலனைத் தெரிந்துகொள் என்பது. Know your competitor’s (enemy’s) strength. எதிரியைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளுகிறவன் தோல்வியைச் சந்திப்பது உறுதி. தாவீதுக்கு கோலியாத்தின் பெலன் என்ன என்பது நன்றாகத் தெரியும். ஆகையால் தான் அவன் சண்டை ஆரம்பிக்கும்போது கோலியாத்துக்கு அருகில் செல்லவில்லை. தூரத்தில் இருந்துகொண்டே கவணினால் அவனை வீழ்த்திவிட்டான். மேலும் தாவீது கர்த்தருடைய உதவியோடு கோலியாத்தை நோக்கிப் போனபடியால்தான் வெற்றி பெற்றான்.  சாத்தானோடு தொடர்ந்து போர்புரிய வேண்டிய நீ, சாத்தானைக் குறைத்து எடைபோட்டுவிடாதே. கர்த்தருடைய உதவியில்லாமல் நீ அவனை மேற்கொள்ளமுடியாது.

ஜெபம்:

ஆண்டவரே, நான் சாத்தானோடு போர் புரியும்போது நீர் என் பக்கத்திலேயே இரும். ஆமென்.