காலைத் தியானம் – செப்டம்பர் 18, 2021

சங் 18: 31 – 40             

என் கால்களை மான்களுடைய கால்களைப் போலாக்கி  

                           மான்களுடைய கால்கள் எப்படிப்பட்டவை? அவற்றின் சிறப்பு என்ன? மான்களின் கால்கள் மிகவும் விரைவாகவும், துரிதமாகவும் ஓடுவதற்கு ஏற்றபடி அமைந்தவை. அவை, உயரமான மலைப் பிரதேசங்களில் நடக்கும்போதும் வழுக்கிவிடாதபடி, நிச்சயத்துடன் அடிகளை எடுத்து வைக்கும் கால்கள்.  தாவீதுக்கு சவுலிடமிருந்து தொடர்ந்து ஆபத்துக்கள் வந்துகொண்டேயிருந்தன. அவன் தப்பித்துக் கொள்வதற்கு மான்களின் கால்களைப் போன்ற கால்கள் தேவையாயிருந்தது. கர்த்தர் அவனுக்கு அவற்றைக் கொடுத்தார். நீ உன் நிலையைக் கர்த்தரிடம் ஒப்படைத்துவிடு. உன் தேவைகளை அவர் பார்த்துக்கொள்வார். உனக்கு என்ன தேவை என்பது அவருக்குத் தெரியும்.

ஜெபம்:

ஆண்டவரே, எனக்குத் தேவையானதைக் கொடுத்து, நீர் என்னை வழிநடத்தும். ஆமென்.