காலைத் தியானம் – செப்டம்பர் 20, 2021

சங் 19: 1 – 14             

கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது  

                           கர்த்தருடைய வேதம் குறைவற்றது. அது மனிதனின் ஆத்துமாவை உயிர்ப்பிக்கும் வல்லமையுடைய, உயிருள்ள வசனங்களை உள்ளடக்கியது. இன்று நமக்கு ஆசீர்வாதமாகக் கொடுக்கப்பட்டுள்ள பரிசுத்த வேதாகமம் 1500 வருட காலகட்டத்தில், வெவேறு பின்னணியிலிருந்து வந்த சுமார் 40 நபர்களால் எழுதப்பட்ட 66 புத்தகங்களைக் கொண்டுள்ளது. எழுதியவர்களின் பின்னணியையும் காலக்கட்டத்தையும் பார்க்கும்போது எத்தனையோ வேற்றுமைகள் இருந்தாலும், 66 புத்தகங்களும் பிசகின்றி, முரண்பாடின்றி, ஒருங்கிணைக்கப் பட்டிருப்பதைப் பார்க்கும்போது, பரிசுத்த ஆவியானவரே முழு வேதாகமத்தின் ஒரே ஆசிரியர் என்பதும், எழுதிய மனிதர்கள் வெறும் எழுத்தாளர்கள் (scribes) மட்டுமே என்பதும் தெளிவாகிறது. வேதாகமத்தில் நமக்குத் தேவையான போதனைகள், தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் அடங்கியிருக்கின்றன. வேதாகமத்தை ஒழுங்காக வாசித்து, தியானித்து உன் ஆண்டவரோடு நேரடியாகப் பேசு. இரவும் பகலும் கர்த்தருடைய வேதத்தையே பிடித்துக்கொள்.

ஜெபம்:

ஆண்டவரே, நான் வேதம் வாசிக்கும்போது உம்முடைய வார்த்தைகளைப் பார்க்கும்படி என் கண்களைத் திறந்தருளும். ஆமென்.