காலைத் தியானம் – செப்டம்பர் 21, 2021

சங் 20: 1 – 9             

சிலர் இரதங்களைக் குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள் 

                           பெற்றோர்கள் பிள்ளைகளைக் குறித்து மேன்மை பாராட்டுகிறார்கள். படித்தவர்கள் தங்கள் அறிவைக் குறித்தும் பெற்ற பட்டங்களைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள். செல்வம் உடையவர்கள் செல்வத்தைக் குறித்து மேன்மைபாராட்டுகிறார்கள். அழகுடையவர்கள் தங்கள் அழகைக் குறித்து மேன்மை பாராட்டுகிறார்கள். தங்களுடைய வீட்டைக் குறித்தும், ஓட்டுகிற வாகனங்களைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறவர்கள் அநேகர் உண்டு. நீ எவைகளைக் குறித்து மேன்மைபாராட்டுகிறாய்? பவுல் அப்போஸ்தலன் எவற்றைக் குறித்து மேன்மை பாராட்டினார் என்பதை 2 கொரிந்தியர் 11: 21-30 வசனங்களில் வாசியுங்கள்.  தாவீது கர்த்தருடைய நாமத்தைக் குறித்தே மேன்மைபாராட்டுகிறார்.

ஜெபம்:

ஆண்டவரே, நீர் எனக்குக் கொடுத்திருக்கும் நன்மைகளைக் குறித்து மேன்மைபாராட்டாதபடி என்னைக் காத்துக்கொள்ளும். ஆமென்.