காலைத் தியானம் – செப்டம்பர் 22, 2021

சங் 21: 1 – 7             

அவர் உம்மிடத்தில் ஆயுசைக் கேட்டார் நீர் . . . தீர்க்காயுசை அளித்தீர் 

                           கர்த்தர் நம்மீது அளவுகடந்த அன்புகொண்டுள்ளவர். நம்முடைய நலனில் நம்மைவிட மேலான அக்கறை அவருக்கு உண்டு. அவர் தம்முடைய பிள்ளைகள் கேட்பதைவிட அதிகமாய்க் கொடுக்கிற தருணங்களும் உண்டு. பிள்ளைகள் கேட்பதைக் கொடுக்காமல் அதைவிட சிறப்பானதைக் கொடுக்கிற தருணங்களும் உண்டு. நீ கேட்ட படிப்பு அல்லது நீ கேட்ட வேலை கிடைக்கவில்லையே என்று வருத்தப்படுகிறாயா? கர்த்தர் நிச்சயமாக நீ எதிர்பார்ப்பதைவிட மேலான திட்டங்களை உனக்காக வைத்திருப்பார்.  பவுல் அப்போஸ்தலனின் அனுபவமும் அதுதான். கர்த்தர் நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையுடையவர் என்று எபேசியர் 3: 20ல் குறிப்பிடுகிறார். நீ கர்த்தர் மேல் உன் விசுவாசத்தை வை.

ஜெபம்:

ஆண்டவரே, நான் கேட்பதற்கு முன் என் தேவைகள் உமக்குத் தெரியும். உம்முடைய சித்தத்தின்படி உம்முடைய நன்மைகளை எனக்குத் தாரும். ஆமென்.