காலைத் தியானம் – செப்டம்பர் 23, 2021

சங் 21: 8 – 13            

அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடிக் கீர்த்தனம்பண்ணுவோம்

                           எப்பொழுது? சத்துருக்கள் அழிக்கப்படும்போது! தாவீது ராஜா கர்த்தருடைய குணாதிசயங்களுக்காக அவரைத் துதிக்கிறார். ஆபத்துக்களிலிருந்து மீட்டதற்காகக் கர்த்தரைத் துதிக்கிறார். தாம் பெற்ற வெற்றிகளுக்காகக் கர்த்தரைத் துதிக்கிறார். ஆசீர்வாதங்களுக்காகக் கர்த்தரைத் துதிக்கிறார். இன்று வாசித்த பகுதியில் கர்த்தருடைய எதிரிகள் (சாத்தானும் அவனுடைய கூட்டத்தாரும்) மேற்கொள்ளப்பட்டு அழிக்கப்படுவதற்காகக் கர்த்தரைத் துதிக்கிறார். தாவீது ராஜாவைப் போல எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தரைத் துதிக்கிறாயா?

ஜெபம்:

ஆண்டவரே, நீர் வல்லவர், நீதியுள்ளவர். உம்மை என்றும் நான் துதித்துக் கொண்டேயிருக்கக் கிருபை தாரும். ஆமென்.