காலைத் தியானம் – செப்டம்பர் 24, 2021

சங் 22: 1 – 8            

என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்

                           இயேசு கிறிஸ்து சிலுவையிலிருந்து கூறிய அதே வார்த்தைகள். அநேக நூற்றாண்டுகளுக்கு முன் தாவீது ராஜா கூறிய வார்த்தைகளை, வேதத்தை நன்றாகக் கற்றறிந்திருந்த இயேசு கிறிஸ்து சொன்னாரா அல்லது இயேசு கிறிஸ்து சொல்லப்போவதைத் தாவீது ராஜா தீர்க்கதரிசனமாகச் சொன்னாரா என்று நமக்குத் தெரியாது. ஆனால் தேவன் இயேசு கிறிஸ்துவையோ, தாவீது ராஜாவையோ அல்லது நம்மையோ கைவிடுவதில்லை என்பது நமக்குத் தெரியும். உலக மனிதர்கள் எல்லாருடைய பாவங்கள் தான், சிலுவையில் தொங்கும்போது இயேசு கிறிஸ்துவை தேவனுடைய பிரசன்னத்திலிருந்து பிரித்தது. அது அவருக்குத் தாங்க முடியாத வேதனையைத் தந்தது. நம்முடைய பாவ வாழ்க்கை நம்மையும் ஆண்டவருடைய பிரசன்னத்திலிருந்து பிரிக்கிறதை நாம் அறிவோம். ஆண்டவர் நம்மைவிட்டு தூரமாய்ப் போகிறதில்லை. நாம் தான் அவரைவிட்டு தூரமாய் விலகிப் போகிறோம். அவர் இன்னும், “ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்?” என்று கேட்டுக்கொண்டேதான் இருக்கிறார்.

ஜெபம்:

ஆண்டவரே, நான் உம்மைவிட்டு விலகிப் போகாதபடி பாவமற்ற வாழ்க்கை வாழ உதவிசெய்யும். ஆமென்.