சங் 22: 9 – 19
என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் நீர் என் தேவனாயிருக்கிறீர்
நீ பிறப்பதற்கு முன்பதாகவே ஆண்டவர் உன்னைத் தெரிந்து கொண்டுவிட்டார். நீ அவரை ஏற்றுக்கொண்டாயா என்பதுதான் கேள்வி. ஒருவேளை இன்னும் உன் பாவங்களை அறிக்கையிடாமல் கிறிஸ்துவால் கழுவப்பட்டு அவரை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பாயானால் இன்றே அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படி. உன் வாழ்க்கையை முற்றிலுமாய் அவரிடம் ஒப்புவிக்கவில்லையென்றால் இத்தனை வருடங்களை வீணடித்துவிட்டாய் என்றுதானே அர்த்தம்? உன் வாழ்க்கையை அவருக்கென்று ஒப்படைத்திருந்தும் பின்வாங்கிவிட்டாய் என்றால் ஆண்டவரிடம் உன்னை மறுபடியும் பிரதிஷ்டை செய்துகொள். Rededicate yourself.
ஜெபம்:
ஆண்டவரே, எனக்கு ஆயுளைத் தந்து இந்நாள் மட்டும் என்னைக் காப்பாற்றிவந்ததற்காக உமக்கு நன்றி சுவாமி. மீதியுள்ள என் வாழ்நாட்களை உமக்காகவே உபயோகிக்க எனக்குக் கிருபை தாரும். ஆமென்.