சங் 22: 20 – 31
பிறக்கப் போகிற ஜனங்களுக்கு
எனக்கு என் தாத்தாவைத் தெரியும். என் பூட்டனாரைப் பற்றியும் (தாத்தாவின் அப்பா) அவர்களுடைய ஒழுக்கம் நிறைந்த கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றியும் அதிகமாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். என் பூட்டனாரின் சந்ததியைக் கணக்கிட்டுப் பார்த்தால், இந்த தலைமுறையில் நாங்கள் 200 பேராவது இருக்கவேண்டும். இந்தத் தலைமுறை ஆண்டவருடைய பிள்ளைகளாக வாழ்வதற்கு என் பூட்டனாரின் வாழ்க்கை ஒரு முக்கிய காரணம். இனி பிறக்கப் போகிற உன்னுடைய தலைமுறைகள் (சந்ததி) எப்படிப்பட்டவர்கள் என்பதை உன் வாழ்க்கை நிர்ணயிக்கும். பொறுப்போடு நடந்துகொள்.
ஜெபம்:
ஆண்டவரே, என் பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகள், அவர்களுடைய பிள்ளைகள் என இன்னும் பிறக்கப் போகிற என் சந்ததியார் எல்லாருக்கும் நான் முன்மாதிரியாக வாழ கிருபை தாரும். ஆமென்.