காலைத் தியானம் – செப்டம்பர் 27, 2021

சங் 23: 1 – 6        

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்      

                           இது நம் அனைவருக்கும் மனப்பாடமாகத் தெரிந்த சங்கீதம். தாவீது ராஜா தன் அனுபவத்திலிருந்து எழுதிய அருமையான சங்கீதம். இந்த சங்கீதத்தைக் கூறி ஜெபித்துவிட்டால் கர்த்தர் நம் மேய்ப்பராகிவிடுகிறார்; ஆகவே இந்த சங்கீதத்தில் சொல்லப்பட்டுள்ள மற்ற எல்லா நன்மைகளையும் நமக்குத் தருவது அவருடைய கடமை என்று நினைத்துவிடுகிறோம். ஆனால் இந்த நன்மைகளைப் பெறவேண்டுமானால் நாம் கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிற ஆடுகளாக இருக்கவேண்டும். “நான் கர்த்தருடைய சத்தத்தை அனுதினமும் கேட்டு கீழ்ப்படிகிற ஆடாக இருக்கிறேன். ஆகையால் கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார். நான் தாழ்ச்சியடையேன் . . . . “ என்று ஆரம்பித்து சங்கீதத்தை மறுபடியும் வாசித்துப் பார். உன் ஆசீர்வாதங்களுக்கு நீயே தடை என்பதை உணர்ந்துகொள்வாய்.

ஜெபம்:

ஆண்டவரே, உம்முடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல் உம்மைவிட்டு வேறு திசையை நோக்கி ஓடிவிட்ட என்னை மறுபடியும் அணைத்து உம் மந்தையில் சேர்த்துக்கொள்ளும். ஆமென்.