காலைத் தியானம் – செப்டம்பர் 28, 2021

சங் 24: 1 – 10        

வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்      

                           வருகிறவர் வல்லமையும், பராக்கிரமும், மகிமையும் நிறைந்த சேனைகளின் கர்த்தர். அவர் உட்பிரவேசிக்கவேண்டுமானால் வாசல்களும், கதவுகளும் உயரவேண்டுமாம். இந்த சங்கீதம், வெளிப்படுத்தின விசேஷத்தில் சொல்லப்பட்டுள்ள புதிய எருசலேமையும், இயேசு கிறிஸ்துவின் வருகையையும் குறித்த தாவீதின் தீர்க்கதரிசனம் என்று நம்பப்படுகிறது. மகிமை நிறைந்த ஆண்டவர் உன் உள்ளத்தில் உட்பிரவேசிக்கவேண்டுமானால் உன் இருதயக் கதவும் உயரவேண்டும். சிற்றின்ப ஆசைகளினாலும் பொருளாசைகளினாலும் குறுகியிருக்கும் உன் இருதயக் கதவு உயரவேண்டும். ஆண்டவர் உன் உள்ளத்திற்குள் வந்துவிட்டாரா அல்லது இன்னும் வெளியே நின்று தட்டிக் கொண்டே இருக்கிறாரா? (வெளி. 3:20)

ஜெபம்:

ஆண்டவரே, என் இதயக் கதவை உயர்த்தியே வைத்திருக்கிறேன். என் உள்ளத்தைவிட்டு விலகாமல் இரும். ஆமென்.