காலைத் தியானம் – செப்டம்பர் 29, 2021

சங் 25: 1 – 10        

உம்மை நோக்கி நாள் முழுதும் காத்திருக்கிறேன்             

                           இந்த காலத்தில், வேலை செய்யும் அலுவலகங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது. ஆகவே வேலையின் பழு அதிகரித்துவிட்டது. வேலைக்குச் செல்லும் பயண நேரம் அதிகரித்துவிட்டது.  மொத்தத்தில் ஜெபத்திற்கும், வேதம் வாசிப்பதற்கும் நேரம் மிகவும் குறைந்துவிட்டது. இதுதானே நம்மில் அநேகருடைய அனுபவம். அந்நிலையில் நாள் முழுவதும் ஆண்டவருக்காகக் காத்திருப்பது சாத்தியமா? தாவீது ராஜாவைப் போல ஆசீர்வதிக்கப்படவேண்டுமானால் ஆண்டவருக்காகக் காத்திருப்பதை சாத்தியமாக்கிக் கொள். இன்றே ஆண்டவருக்கென்று நேரத்தை ஒதுக்கி வைத்து அதையே ஒரு கட்டுப்பாடாக வைத்துக்கொள்.

ஜெபம்:

ஆண்டவரே, என் நேரத்திலேயும் உமக்கு முதலிடம் கொடுக்க விரும்புகிறேன். என் விருப்பத்தை ஆசீர்வதியும். ஆமென்.