காலைத் தியானம் – செப்டம்பர் 30, 2021

சங் 25: 11 – 21      

தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்            

                           தாவீதின் ஆசீர்வாதம் நிறைந்த வாழ்க்கையின் இரகசியம் இதுதான். முதலாவதாக அவர் கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷனாய் இருந்தார், ஆகவே தன் பாவங்களை அறிக்கையிட்டு, மன்னிப்பைப் பெற்று, கர்த்தரையே நோக்கிக் கொண்டிருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாகக் கர்த்தர் தெரிந்துகொள்ளும் வழியில் நடக்கத் தயாராக இருந்தார். நம்முடைய குழப்பங்களுக்குக் காரணமே நாம் தெரிந்துகொள்ளும் வழியைக் கர்த்தர் ஆமோதிக்கவேண்டும் என்று எண்ணுவதுதான். உன் வாழ்க்கையை முற்றிலுமாய் ஆண்டவரிடம் ஒப்படைத்துவிட்டாய் என்ற நிச்சயம் உனக்கு உண்டா?

ஜெபம்:

ஆண்டவரே, நீர் காட்டும் வழியில் நடக்க நான் தயாராக இருக்கிறேன். வழிநடத்தும். ஆமென்.