சங் 28: 1 – 9
நீர் கேளாதவர் போல மவுனமாயிராதேயும்
அநேக சங்கீதங்களில், முதற் பகுதி தாவீது ராஜாவின் இக்கட்டான சூழ்நிலைகளையும் அவருடைய ஜெபத்தையும் விவரிக்கின்றது. இரண்டாம் பகுதி, கர்த்தர் யார் என்பதையும் அவர் கொடுத்த வெற்றிகளையும் விவரிக்கின்றது. இந்த 28ம் சங்கீதத்திலும் அதைப் பார்க்கிறோம். முதலாம் வசனத்தில் கேளாதவர் போல மவுனமாயிராதேயும் என்று ஆரம்பித்து, 6ம் வசனத்தில், கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அவர் என் விண்ணப்பண்க்களின் சத்தத்தைக் கேட்டார் என்று தாவீது சொல்லுகிறார். உன் ஜெபத்தில் நீ கேட்டது கிடைக்காவிட்டால், அது உனக்கு வேண்டாம் என்பதே பதிலாக இருக்கலாம். அல்லது காத்திரு என்பது பதிலாக இருக்கலாம். ஆண்டாவர் உன் ஜெபத்தைக் கேட்கவில்லை என்று நினைத்துவிடாதே.
ஜெபம்:
ஆண்டவரே, என் ஜெபத்தை நீர் எப்பொழுதும் கேட்கிறீர் என்பதை நினைவுபடுத்தியதற்காக நன்றி. உம்முடைய வழிநடத்துதலுக்காகக் காத்திருக்கும் பொறுமையை எனக்குத் தாரும். ஆமென்.