காலைத் தியானம் – அக்டோபர் 05, 2021

சங் 29: 1 – 11      

கர்த்தருடைய சத்தம் கேதுரு மரங்களை முறிக்கிறது    

                           கர்த்தருடைய வல்லமையையும், இயற்கையின் மீது அவருக்கு இருக்கும் அதிகாரத்தையும் இந்த சங்கீதம் நமக்கு ஞாபகப் படுத்துகிறது. லீபனோனின் கேதுரு மரங்கள் 120 அடி உயரமும் 80 அடி சுற்றளவும் உடையவைகளாக வளரக் கூடியவைகள். அப்படிப்பட்ட மரங்கள் கூட கர்த்தருடைய சத்தத்திற்கு முன் ஒன்றுமில்லை. சுனாமி அலைகள், வெள்ளத்தின் மூலம் வரும் அழிவுகள் – இவைகளுக்கு முன் மனிதன் எம்மாத்திரம் என்பதை நாம் அறிவோம். ஆனால் இவைகள் அனைத்தும் கர்த்தருடைய வல்லமைக்கு உட்பட்டவைகள். ஆகையால் பலவான்களின் புத்திரரே, உங்கள் பெற்றோர் மூலம் நீங்கள் பெற்ற உடல் ஆரோக்கியம், கல்வி, பணம், வேலை ஆகியவற்றைக் குறித்து மேன்மைபாராட்டாமல், கர்த்தருடைய வல்லமையையே சார்ந்திருங்கள்.         

ஜெபம்:

ஆண்டவரே, சதாகாலமும் உமக்கே மகிமையையும், துதிகளையும் செலுத்துவேன். ஆமென்.