காலைத் தியானம் – அக்டோபர் 06, 2021

சங் 30: 1 – 12      

நான் குழியில் இறங்குகையில் என் இரத்தத்தால் என்ன லாபமுண்டு?          

                           நமக்குக் கொடுக்கப்பட்டிருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான். நாம் பூமியில் வாழும் நாட்கள் காலையில் பூத்து மாலையில் வாடிவிடும் மலருக்கு ஒப்பானது. கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் கோவிட்-19 பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு மரித்துவிட்ட அநேகர் நமக்கு இவ்வுண்மையை அடிக்கடி நினைவுபடுத்தி விட்டார்கள். அப்படிப்பட்ட குறுகிய வாழ்க்கையை வீணாக்கிவிடக்கூடாது என்பது இன்று நமக்கு ஞாபகப்படுத்தப்படும் பாடம். நாம் உயிரோடிருக்கும் நாட்களில் செய்ய வேண்டியவைகளுள் முக்கியமானவை தேவனைத் துதித்துக் கொண்டே இருப்பதும், அவருடைய சத்தியத்தை (நற்செய்தியை) அறிவிப்பதும்தான். ஒவ்வொரு நாளும் உன் ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் வெகுமதி. அதை வீணாக்காமல் உபயோகப்படுத்திக்கொள்.       

ஜெபம்:

ஆண்டவரே, என் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளையும் உமக்கென்றே உபயோகிக்க உதவிசெய்யும். ஆமென்.