சங் 31: 1 – 13
எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும்
சாத்தான் நமக்கு நேராக வந்து நம்மிடம் மோத மாட்டான். தன் தந்திரத்தால் நம்மை விழவைக்க வழி தேடுகிறான். ஆதாம் ஏவாள் காலம் முதல் இன்று வரை கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றி விட்டான். ஆண்டவருடைய பிள்ளைகளையும் அவன் விட்டுவைக்கவில்லை. சாத்தான் பலவிதமான தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் உபயோகித்து கர்த்தருடைய பரிசுத்தவான்களையும் கீழே தள்ளுவதை பார்த்திருக்கிறோம் அல்லவா? நாம் செய்யவேண்டியது என்ன? முதாலாவதாக தாவீதின் இந்த ஜெபத்தை நாமும் ஜெபிக்க வேண்டும் – அனுதினமும் ஜெபிக்கவேண்டும். இரண்டாவதாக விழுந்த தேவனுடைய ஊழியக்காரரைக் குறித்து பரிகாசம்பண்ணாமல் அவர்களுக்காகவும் மற்றெல்லா ஊழியக்காரர்களுக்காகவும் ஜெபிக்கவேண்டும்.
ஜெபம்:
ஆண்டவரே, சாத்தான் எனக்கு தெரியாமல் வைக்கும் வலையில் நான் சிக்கிக் கொள்ளாதபடி என்னைக் காத்தருளும். உம்முடைய பரிசுத்தவான்கள் எல்லாரையும் சாத்தானின் தந்திரங்களிலிருந்து தப்புவியும். ஆமென்.