காலைத் தியானம் – அக்டோபர் 08, 2021

சங் 31: 14 – 24      

நீர் உண்டுபண்ணி வைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது         

                           ஆரோக்கியமான உடல், நல்ல படிப்பு, பணம், வசதி, பதவி ஆகியவை எல்லாம் ஆண்டவரிடமிருந்து வரும் நன்மைகள்தான். ஆனால் இவைகளைத் தாவீது “எவ்வளவு பெரிதாயிருக்கிறது” என்று சொல்லவில்லை. தாவீது குறிப்பிடும் நன்மை, தேவனுடைய கிருபையினாலே நாம் பெற்றிருக்கும் இரட்சிப்பே. பரலோகத்திலே தேவன் நமக்காக ஆயத்தம்பண்ணி வைத்திருக்கும் ஜீவ கிரீடம், வாசஸ்தலம் (வீடு) ஆகியவைகளே இந்த பெரிதான நன்மை. இந்த நன்மை உண்டு என்ற நிச்சயம் உனக்கு உண்டா?       

ஜெபம்:

ஆண்டவரே, உமது இரக்கத்தால் என்னை மீட்டுக்கொண்டதற்காக உம்மைத் துதிக்கிறேன். பரலோகத்தில் நீர் ஆயத்தம் பண்ணி வைத்திருக்கும் நன்மைகளுக்காக நன்றி சுவாமி. ஆமென்.