காலைத் தியானம் – அக்டோபர் 09, 2021

சங் 32: 1 – 11      

நான் என் அக்கிரமத்தை மறைக்காமல் என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்         

                           ஆண்டவருக்கு நாம் செய்த அல்லது செய்கிற பாவங்கள் எல்லாம் தெரியும் என்பது நமக்கும் நன்றாகவே தெரியும். அப்படியானால் ஏன் தாவீது “அக்கிரமத்தை மறைக்காமல்” என்று கூற வேண்டும்? ஆண்டவரிடமிருந்து நம் பாவங்களை மறைக்க முடியாது. ஆனால் சில காரணங்களுக்காக பாவங்கள் எல்லாவற்றையும் நாம் அறிவித்து மன்னிப்பு கேட்காமல் இருக்கலாம். உதாரணமாக அநேக நாட்களுக்கு முன்பாக நாம் ஒருமுறை மட்டும் செய்த பாவத்தை அறிக்கையிட வேண்டியதில்லை என்று நினைக்கலாம். மேலும் சில பாவங்களை நாம் பாவம் என்றே உணருவதில்லை. நாம் வருமான வரி ஒழுங்காக செலுத்தவில்லையென்றால் அது பாவம் என்பதை உணருகிறோமா? (மத்தேயு 22:21). கலாச்சாரம் அனுமதிக்கின்றது என்ற ஒரே காரணத்தினால் வரதட்சணை (dowry) வாங்குவது சமூக ரீதியாகவும் இந்திய சட்ட ரீதியாகவும் தவறு. ஆகையால் அதுவும் பாவம் (sin)  என்பதை உணருகிறோமா?      

ஜெபம்:

ஆண்டவரே, நான் தெரிந்தும், தெரியாமலும் செய்த எல்லா பாவங்களையும் மன்னியும். தெரியாமல் செய்த பாவங்களைத் திரும்பவும் செய்துவிடாமல் காத்துக் கொள்ளும். ஆமென்.