காலைத் தியானம் – அக்டோபர் 10, 2021

சங் 33: 1 – 9      

அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்         

                           இந்த சங்கீதத்தை எழுதியது யார் என்பது நிச்சயமாகத் தெரியவில்லை என்றாலும் தாவீதுதான் இதையும் எழுதியிருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. இரண்டாவது வசனத்தில் பத்து நரம்பு வீணை என்பது harp என்னும் இசைக் கருவியைக் குறிக்கும். தாவீது harp  வாசிப்பதில் திறமை மிகுந்தவர். தாவீது தான் இந்த சங்கீதத்தையும் எழுதியிருப்பார் என்று கருதப்படுவதற்கு இது ஒரு முக்கியக் காரணம். 6 முதல் 9 வரையுள்ள வசனங்கள் தேவனுடைய படைப்பின் வல்லமையைக் குறித்த கவிதை. அப்படிப்பட்ட வல்லமையான தேவனை நாமும் இசைக்கருவிகளோடும் புதுப்பாடல்களோடும் துதித்துக்கொண்டேயிருக்க வேண்டும். நீ தினமும் அவரைத் துதித்துப் பாடுகிறாயா?     

ஜெபம்:

ஆண்டவரே, நீர் உம்முடைய வார்த்தையினால் வானத்தையும், உம்முடைய சுவாசத்தினால் சகல சேனைகளையும் உண்டாக்கினவர். உம்மை எப்போதும் துதிக்கொண்டிருக்கும் பாக்கியத்தை எனக்குத் தாரும். ஆமென்.