காலைத் தியானம் – அக்டோபர் 11, 2021

சங் 33: 10 – 22      

ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்  

                           கர்த்தருக்குப் பயந்தவர்கள் எல்லாரும் பணக்காரராகிவிடுவார்கள் என்று சங்கீதக்காரன் சொல்லவில்லை. அவர்களுடைய வாழ்க்கை சொகுசாக இருக்கும் என்று சொல்லவில்லை. அவர்களுக்கு வியாதி வராது என்றோ, அவர்கள் மரிப்பதில்லை என்றோ அவர் சொல்லவில்லை. ஆனால் கர்த்தருக்குப் பயந்து உத்தமனாய் வாழ்கிற அவருடைய பிள்ளைகளின் ஆத்துமாக்களை அழியாமல் அவர் காத்துக்கொள்வார் என்கிறார் இந்த சங்கீதத்தின் ஆசிரியர். உன்னுடைய பணமோ அல்லது பதவியோ உன் ஆத்துமாவைக் காப்பாற்ற முடியாது. உன் சுயபெலனை நம்பி, நித்திய வாழ்விற்குச் செல்லவேண்டிய உன் ஆத்துமாவை இழந்துவிடாதே. இந்த உலகத்தை ஆதாயப்படுத்திக்கொண்டு உன் ஆத்துமாவை இழந்துவிடாதே.    

ஜெபம்:

ஆண்டவரே,  என் வாழ்க்கை நீதியிலும் நியாயத்திலும் நிலைத்திருக்கவும், உம்முன் உத்தமமாய்க் காணப்படவும் கிருபை தாரும். ஆமென்.