சங் 34: 9 – 22
பிள்ளைகளே . . . கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்
கர்த்தருக்குப் பயப்படுதல் போதிக்கப்படவேண்டிய ஒன்று. குறிப்பாக பெற்றோரால் பிள்ளைகளுக்குப் போதிக்கப்படவேண்டும். இங்கிலாந்து போன்ற சில நாடுகளில் இன்று ஆலயங்களில் வயது முதிர்ந்தவர்கள் மட்டுமே காணப்படுகிறார்கள். அது மாத்திரமல்ல, ஆயிரம்பேர் உட்காரக்கூடிய ஆலயக் கட்டிடங்களில் ஐம்பதுபேர் மட்டும் ஆராதனை செய்கிறார்கள். அந்நிலையைப் பார்க்கும்போது, நம் மனதில் தோன்றும் முதல் கேள்வி, இவ்வூரின் இளைஞர்கள் எங்கே என்பது. இரண்டாவது கேள்வி, இந்தியாவிற்கு 19ம் நூற்றாண்டிலும், 20ம் நூற்றாண்டின் முதற்பகுதியிலும் நூற்றுக்கணக்கான மிஷனரிகளை அனுப்பிய நாடுகளில் ஏன் இந்த நிலை என்பது. பிள்ளைகளுக்கு சுதந்திரத்தைக் கொடுக்கிறோம் அல்லது சுயமாய் சிந்திக்கக் கற்றுத்தருகிறோம் என்று நினைத்து கர்த்தருக்குப் பயப்படுதலைப் போதிக்காமல் இருந்துவிடாதீர்கள். ஓய்வு நாள் பள்ளியில் சொல்லிக் கொடுப்பார்கள் என்று நினைத்து சும்மாயிருந்துவிடாதீர்கள்.
ஜெபம்:
ஆண்டவரே, கர்த்தருக்குப் பயப்படுதலைச் சொல்லிக்கொடுக்க வேண்டிய ஞானத்தையும் பொறுமையையும் எனக்குத் தாரும். ஆமென்.