காலைத் தியானம் – அக்டோபர் 14, 2021

சங் 35: 1 – 10      

அவன் மறைவாய் வைத்த வலை அவனையே பிடிக்கவுங்கடவது   

                           மற்றவனுக்கு விரோதமாய்க் குழி வெட்டினால், தான் வெட்டின குழியில் குழி வெட்டியவனே விழக்கூடும். பட்டயத்தை எடுக்கிறவன் பட்டயத்தினாலேயே மடிகிறான்.  “நீ ஒருவனுக்கு எந்த அளவினால் அளக்கிறாயோ. அந்த  அளவினாலேயே உனக்கு அளக்கப்படும்” என்பது வேதவாக்கு. இந்த உண்மை அடிக்கடி அரசியலிலும், ஜாதிகலவரங்களிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் நிகழ்வதைக் கண்டிருக்கிறோம். யாருக்கும் தீங்கு செய்ய நினைக்காதே. உனக்குத் தீமை செய்கிறவர்களுக்குக் கூட தீமை செய்ய நினைக்காதே. நியாயந்தீர்ப்பதும், தண்டனைக் கொடுப்பதும் நம் தேவனுடைய கடமை.

ஜெபம்:

ஆண்டவரே, யாருக்கும் தீமை செய்வதை என் மனதாலும் நினைக்காதபடி என் எண்ணங்களைக் காத்துக்கொள்ளும். ஆமென்.