சங் 35: 19 – 28
என் நாவு உமது நீதியையும், நாள் முழுதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டேயிருக்கும்
தாவீது ஒரு நாட்டின் ராஜா. எத்தனையோ வேலைகள் மற்றும் பிரச்சனைகள் இருந்திருக்கும். தன் மக்களின் நலனுக்காகப் பாடுபடுவது ஒரு பக்கம்; எதிரிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றவேண்டிய போர் சம்பந்தப்பட்ட பொறுப்பு இன்னொரு பக்கம். இந்த சூழ்நிலையிலும் நாள் முழுவதும் ஆண்டவரைத் துதித்துக் கொண்டிருப்பேன் என்கிறார் தாவீது. பரலோகத்தில் நாம் அதைத்தானே செய்வோம்! ஆண்டவரைத் துதிப்பதைத் தவிர பரலோகத்தில் நமக்கு வேறு என்ன வேலை? பரலோகத்தில் செய்யப்போவதையே பூமியில் செய்துவிட்டால், பரலோகம் பூமிக்கு வந்துவிடுமே!
ஜெபம்:
ஆண்டவரே, நீரே துதிக்குப் பாத்திரரானவர். உம்மை அனுதினமும், ஒவ்வொரு நிமிடமும் துதித்துக் கொண்டிருக்கும் பரலோக அனுபவத்தை எனக்குத் தாரும். ஆமென்.