காலைத் தியானம் – அக்டோபர் 17, 2021

சங் 36: 1 – 12      

துன்மார்க்கன் . . . புத்தியாய் நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான்   

                           ஒருவனும் பிறக்கும்போதே துன்மார்க்கனாய்ப் பிறப்பதில்லை. துன்மார்க்க வாழ்க்கை மனிதனாகத் தெரிந்துகொள்ளும் ஒரு வாழ்க்கை. புத்தியாய் நடந்து, நன்மை செய்துகொண்டிருக்கும் ஒருவன் துன்மார்க்கனாக மாறமுடியும் என்பதை இந்த வசனம் சுட்டிக் காட்டுகிறது.  அதே போல துன்மார்க்கனும் மனந்திரும்பி கிறிஸ்துவின் பிள்ளையாக மாறமுடியும் என்பதை நாம் அறிவோம். ஆகையால் யாரையும் பாவி, துன்மார்க்கன் என்று கூறி ஒதுக்கிவிடவேண்டாம். அப்படிப்பட்டவர்களின் இரட்சிப்புக்காக ஜெபிபோம். தாவீது ராஜா தேவனை அறிந்தவர். அவரை எதிர்த்தவர்கள் தேவனை அறியாதவர்கள். அவர்களும் தேவனுடைய பிள்ளைகளாகலாம் என்ற எண்ணம் தாவீதுக்கு வந்ததாகத் தெரியவில்லை. காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்கவே உலகிற்கு வந்தேன் என்று சொன்ன இயேசுவை அறிந்த நாம், துன்மார்க்க வாழ்க்கையில் சுழன்றுகொண்டிருக்கும் நம் சகோதர சகோதரிகளுக்காக ஜெபிப்போமாக.

ஜெபம்:

ஆண்டவரே, என் உறவினர்கள், நண்பர்கள், என்னுடன் வேலை செய்பவர்கள் – இவர்களில் உம்மை அறியாதவர்கள், மற்றும் இரட்சிப்பின் அனுபவம் இல்லாதவர்கள் அநேகர். அவர்கள் எல்லாரோடும் பேசியருளும். அவர்களையும் மீட்டுக்கொள்ளும். ஆமென்.