சங் 37: 1 – 10
பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்
எரிச்சல், கோபம், பொறாமை முதலியவைகள் விரும்பப்படத்தக்க குணங்கள் அல்ல. இந்த குணங்களினால் எந்தவித பிரயோஜனமுமில்லை. மாறாக இந்தத் தீய குணங்கள் பொல்லாப்புச் செய்ய ஒருவனை வழிநடத்திவிடும். கொலைக் குற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளைக் கேட்டுப் பாருங்கள். அவர்கள் செய்த கொலைக்கு மூல காரணம் எதுவாக இருந்தாலும், கோபம், எரிச்சல் ஆகியவைகளே கொலை செய்யத் தூண்டிய அடிப்படை உணர்வுகள் என்பதை அறிந்துகொள்வீர்கள். பலவிதமான தீய செயல்களுக்கும் கோபமும் எரிச்சலும் தான் அடிப்படைக் காரணம்.
ஜெபம்:
ஆண்டவரே, கோபம்,எரிச்சல், பொறாமை போன்ற தீய குணங்கள் என் அருகில் வராதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.