காலைத் தியானம் – அக்டோபர் 19, 2021

சங் 37: 11- 20      

அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப் பார்க்கிலும் நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது   

                           ஏழ்மையில் வாடிய ஒருவன் இதை எழுதவில்லை. செல்வத் திரட்சியில் புரண்டுகொண்டிருந்த தாவீது ராஜா தான் இந்த சங்கீதத்தையும் எழுதியிருக்கிறார். பணம், செல்வம், வசதி போன்றவைகள் துன்மார்க்கருக்கும் அல்லது ஆண்டவரை அறியாத மக்களுக்கும் உண்டு என்பதை இந்த வசனம் சுட்டிக்காட்டுகிறது. நாமும் தலைமுறை தலைமுறையாக அதைப் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறோம். அதே போல, அதிகப் பணம் அல்லது செல்வம் இல்லாத நீதிமான்களும் உண்டு. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, தாவீது, சாலொமோன் போன்றவர்கள் ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட செல்வந்தர்கள்; ஆகையால் கர்த்தருடைய பிள்ளையாகிய நீயும் அநேக செல்வங்களைப் பெறுவாய் என்று சொல்லப்படும் வாக்குறுதிகளைக் குறித்து கவனமாய் இருங்கள்.

ஜெபம்:

ஆண்டவரே, செல்வத் திரட்சியை அல்ல, நீதிமானாய் இருப்பதையே விரும்புகிறேன். உமது கிருபை என்னோடிருக்கட்டும்.  ஆமென்.