காலைத் தியானம் – அக்டோபர் 20, 2021

சங் 37: 21- 30      

அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை   

                           பணம், செல்வம் என்று அவைகளைத் துரத்திக் கொண்டே வாழ்நாட்களை வீணாக்கிவிடக் கூடாது என்பதை அடிக்கடி தியானித்து வருகிறோம். நேற்றும் தியானித்தோம். அப்படியானால் பணமே தேவையில்லை என்று அர்த்தமா? இல்லை. கர்த்தர் தம்மை விசுவாசித்து தம்முடைய வழிநடத்துதலின்படி வாழ்கிற தம்  பிள்ளைகளின் தேவைகளைப்  பார்த்துக் கொள்வார் என்று அர்த்தம். தம்முடைய பிள்ளைகள் சாப்பாட்டிற்கு கஷ்டப்படுவதையும் கடன் வாங்குகிறதையும் ஆண்டவர் விரும்புகிறதில்லை. அதே சமயம், நீ செல்வத்தின் பின்னால் ஓடக்கூடாது என்று சொல்வது, உன்னைச் சோம்பேறியாக இருக்கக் கொடுக்கப்படும் உரிமை (licence) என்று நினைக்கவேண்டாம். உன் தேவைகள் எல்லாவற்றையும் பூர்த்தி செய்யவும் நீ கடன் வாங்காமல் இருக்கவும் அனுதினமும் உன் ஆண்டவரைக் கேள்.

ஜெபம்:

ஆண்டவரே, அன்றன்றுள்ள அப்பத்தை இன்று எனக்குத் தாரும். ஆமென்.